லவ்வர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காதலும் பிரிவும் தான் படத்தின் ஒன்லைன்

மணிகண்டனும் ஸ்ரீகெளரி ப்ரியாவும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு வில்லனாக இவர்களின் சில செயல்பாடுகளே அமைகின்றன. காதலும் மோதலுமாய் கழியும் இவர்களின் பொழுதுகள் எப்படியெல்லாம் விடிகிறது முடிகிறது என்ற சம்பவங்களின் தொகுப்பே படத்தின் திரைக்கதை

தன் சிறப்பான நடிப்பு மூலம் படத்திற்கு நல்ல மைலேஜ் சேர்த்துள்ளார் மணிகண்டன். எமோஷ்னல் காட்சிகளில் அதிகப்படியாக ஸ்கோர் செய்கிறார். ஸ்ரீகெளரி ப்ரியா தன் அழுத்தமான நடிப்பால் அவரது கேரக்டரை உச்சத்திற்கு கொண்டுபோயுள்ளார். மிகச்சிறப்பான நடிப்பு அவரது நடிப்பு. கீதா கைலாசம் கேரக்டருக்கான ரைட்டிங்கும் அவரது ஆக்டிங்கும் வேறலெவல். கண்ணா ரவி மெச்சூட் ஆன நடிப்பால் கவர்கிறார். சரவணன் உள்ளிட்ட சின்னச் சின்ன சப்போர்ட் கேரக்டர்களும் படத்தில் ஸ்கோர் செய்கிறார்கள்

ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. பெரியளவில் லைட்டிங் செய்யாமல் துருத்தாது ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இரு பாடல்களை இதயத்திற்கு நெருக்கமாக கொடுத்துள்ளார். பின்னணி இசையும் படத்திற்கு பேருதவி செய்திருக்கிறது

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையை தெளிவில்லாத திரைக்கதையால் சில இடங்களில் வீணடித்துள்ளார் இயக்குநர். மணிகண்டன் பாயிண்ட் ஆப் வியூ கதையாக படம் கன்வே ஆகவே இல்லை காரணம் மணிகண்டன் கேரக்டர் அவ்ளோ வீக் ஆக இருக்கிறது. இந்தப்படத்தில் ரசிகர்கள் யார் பக்கம் நிற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. காதலிக்கும் இன்றைய ஆண் பெண்களின் உளவியலை அறிந்து படமாக்கியுள்ள சில காட்சிகள் எல்லாம் சிறப்பு. இயக்குநர் பிரபு ராம் வியாஸ் திரைக்கதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த லவ்வரை எல்லோரும் லவ் பண்ணியிருப்பார்கள்
3/5