சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வாங்கும் கபிலன் வைரமுத்து!

Get real time updates directly on you device, subscribe now.

டந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் இந்த ஆண்டும் 2018 விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மையர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிருக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பத்திரிகை உலகில் பாலம் என்ற மலரும் வெளியிடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.