‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியை தொடங்கியுள்ள ஆஹா தமிழ், முதல் வெளியீடு ‘பயாஸ்கோப்’!
உலகளாவிய தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் விரும்பும் முன்னணி ஓடிடி தளமான ஆஹா, துணிச்சலான மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது. ஆஹா ஃபைண்ட் எனும் புதுமையான முன்னெடுப்பை இன்று அறிவிப்பதில் ஆஹா பெருமிதம் கொள்கிறது. புதிய திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத கதைகளை சொல்லவதற்குமான சாளரமாக ‘ஆஹா ஃபைண்ட்’ திகழும்.
வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியின் வாயிலாக வழங்குவதன் மூலம் தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட உரிமத்திற்கான நம்பகமான சந்தையான புரொடியூசர் பஜார் உடன் இணைந்து ‘ஆஹா ஃபைண்ட்’ அதன் பயணத்தை தொடங்கி உள்ளது.
ஆஹா ஃபைண்ட்டின் முதல் வெளியீடான பிரபல இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயாஸ்கோப்’ கிராமிய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர். தாஜ்நூரின் தனித்துவமிக்க இசையமைப்புடன். செழுமையான கதைசொல்லல் மற்றும் புதுமையான படைப்பாக்கத்தின் கலவையான ‘பயாஸ்கோப்’, ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது.
தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை செழுமையாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, சிறந்த கதைகளைக் கண்டறிந்து அவற்றை உலகத் திரைகளுக்குக் கொண்டுவருவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆஹா ஃபைண்ட் வெறும் திரைப்பட தளமாக மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை தமிழ் படைப்பாளிகளை ஊக்குவித்து, ஆதரித்து, கொண்டாடுவதர்கான ஒரு இயக்கமாக செயல்படும். இந்த அற்புதமான பயணத்தில் இணைய அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதைசொல்லிகள் மற்றும் சினிமா சமூகத்தை சேர்ந்தவர்களை ஆஹா அழைக்கிறது. புதிய திறைமைகள் மற்றும் சொல்லப்படாத கதைகளை வெளிக்கொணர்வதன் மூலம், படைப்பாற்றலுக்கு பரந்த தளத்தை உருவாக்குவதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது.