எச்சரிக்கையுடன் படங்களை கமிட் செய்யும் ஜோதிகா!

Get real time updates directly on you device, subscribe now.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆரம்பித்திருக்கிறார் நடிகை ஜோதிகா.

இதனால் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருப்பதால், முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

Related Posts
1 of 141

அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகும் ‘காற்றின் மொழி’படம் அவரைப் பற்றியும், படத்தைப் பற்றியும் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த எதிர்பார்ப்புக்கிடையே ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படமாக தயாரிக்கும் புதுப்படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார். இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.