பாபி சிம்ஹா திடீர் கண்டிஷன்! : சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா ரேஷ்மிமேனன்?

Get real time updates directly on you device, subscribe now.

bobby-simha

டிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் சென்ற ஆண்டு தான் ரேஷ்மிமேனனுக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசாகி அவரது இருப்பை ரசிகர்கள் மத்தியில் காட்டியது.

ஆனால் அவரோ தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு பாபி சிம்ஹாவுடன் காதலில் திளைக்க, விஷயம் மீடியாக்களில் கசிந்து இருவருமே இப்போது திருமணம் செய்யத் தயாராகி வருகிறார்கள்.

கைவசம் ‘நட்பதிகாரம் -79’ படத்தை மட்டுமே வைத்திருக்கும் ரேஷ்மிமேனம் இந்த ஆண்டு புதுப்படம் எதையும் கமிட் செய்யவில்லை.

Related Posts
1 of 9

அதற்கு காரணம் பாபிசிம்ஹா தானாம். திருமணத்துக்குப் பிறகு தன்னை தொடர்ந்து படங்களில் நடிக்க சம்மதிப்பார் என்று நினைத்திருந்தாராம் ரேஷ்மி. ஆனால் திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்று தன் வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க தடை போட்டு விட்டாராம் பாபி சிம்ஹா.

இதனால் அதிச்சியடைந்த ரேஷ்மி வேறு வழியில்லாமல் பாபி சிம்ஹாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போடத் தயாராகி விட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டுக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.