சினிமாவின் தொழில்நுட்பத்தையும், கலையியலையும் திறன்பட கற்றுத்தரும் BOFTA!
சினிமாவின் நுணுக்கமான தொழில்நுட்ப கல்வி கலைத் துறையில் அடி எடுத்து வைக்கவும், வெற்றி பெறவும் பெரிதும் கைக்கொடுக்கும். அந்த தொழில்நுட்ப கல்வியை திறம்பட கற்றுக் கொடுக்கிறது ‘ப்ளூ ஓஷன் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி (BOFTA) கல்வி நிறுவனம்.
திரைப்படக் கலையின் வரலாறு, குறிப்புகள், சினிமாவை நோக்கும் முறைகள் தவிர மேலும் நடிப்பு கலை, திரைப்பட இயக்கம், திரைக்கதை வடிவமைத்தல்,டிஜிட்டல் ஒளிப்பதிவு, டிஜிட்டல் படத்தொகுப்பு, சினிமா ஊடகவியல், திரைப்படத் தயாரிப்பு மேலாண்மை மற்றும் திரைப்பட நிகழ்ச்சி மேலாண்மை என திரைப்படத்துறையின் மிக முக்கிய தொழில்நுட்பக் கலைகள் பலவும் கற்றுக்கொள்ள செயல்முறைபாடத் திட்டங்கள் BOFTA வில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாக்கியராஜ், இயக்குனர் பார்த்திபன், இயக்குனர் விஜய், இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் மகேந்திரன், எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் மதுஅம்பட் எனத் திரைத்துறையில் சிறந்து விளங்கும் பல வல்லுனர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள BOFTA ஒரு பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வி ஆண்டின் வகுப்புகள் ஜூலை 1 முதல் BOFTAவில் தொடங்கின திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் பல மாணவர்கள் நம்பிக்கையுடன் பெருமிதத்துடனும் வகுப்புகளில் பங்கேற்றனர்.
முதல் நாள் அன்று BOFTA விற்கு வந்து மாணவர்களை வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களும், பயிற்சியாளர்களும் தங்களது ஆரம்ப காலங்களில் BOFTA போன்றதொரு நல்ல வாய்ப்பு அமையவில்லை. இப்படி ஒரு தரமான கல்வியகத்தில் பயில்வது மாணவர்களின் பாக்கியம் என வாழ்த்தினர்.