‘சூப்பர் ஸ்டார்’ அஜித் : பத்த வெச்சிட்டீங்களே விவேக் ஓபராய்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

ஜினியிடம் இருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் அடுத்து யாருக்கு என்கிற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

குறிப்பாக அஜித் – விஜய் ரசிகர்கள் தான் இந்த விஷயத்தில் எப்போதுமே குடுமிபிடி சண்டை போட்டு வருகிறார்கள். ”சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?” ”சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு யார் தகுதியானவர்?” என்கிற கேள்விகளை எல்லாம் அவ்வப்போது முன்வைத்து ஆன்லைனில் வாக்குப்பதிவு கூட நடத்தி பரபரப்பை கிளப்புவார்கள்.

ஆனால் இன்றுவரை இரண்டு ஹீரோக்களுமே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் தங்களுக்கு வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்து எதுவும் வாய் திறந்து பேசியதில்லை.

விஜய் கூட தான் நடிக்கிற படங்களில் ‘இளைய தளபதி’ என்கிற பட்டத்தை போட்டுக் கொள்கிறார். அஜித்தோ ரசிகர்கள் அன்போடு கொடுத்த ‘தல’ என்கிற பட்டத்தை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளாமல் வெறுமனே அஜித் என்கிற தன்னுடைய பெயரை மட்டுமே படங்களின் டைட்டில் கார்டு உள்ளிட்ட விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

Related Posts
1 of 119

இப்படி அவ்வப்போது பரபரப்பை கிளப்பும் இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்து கொஞ்சகாலம் ஆறிப்போயிருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் கிளறி விட்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

ஆமாம், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏ கே 57’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடிக்கிறார் என்கிற செய்தியை அவரே உறுதி செய்திருக்கிறார். அதுகுறித்து தெரிவித்திருந்த கருத்தில் தான் ”நான் என்னுடைய முதல் தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறேன். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அஜித்குமாருடன் நடிக்க உள்ளேன். நான் அவரை அஜித் அண்ணா என்று தான் அழைப்பேன். இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அஜித் அண்ணாவுடன் நடிப்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று அஜித்தை ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெருமிதத்தோடு வர்ணித்திருக்கிறார் விவேக் ஓபராய்.

ஏற்கனவே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு அடித்துக் கொள்ளும் அஜித் விஜய் ரசிகர்களிடையே மீண்டும் விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறது விவேக் ஓபராயின் இந்த லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! ஆக இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து சமூகவலைத்தளங்களில் களை கட்டும் என்பது மட்டும் உறுதி!

பத்த வெச்சிட்டீங்களே விவேக் ஓபராய்!