ஒரு செல்பி புரட்சி
ஆஹா இதெல்லவோ வெறித்தனம் என்று விஜய் ரசிகர்கள் திக்குமுக்காடித் திரிகிறார்கள். விஜய் எடுத்த ஒரு செல்பியால் வந்த கொண்டாட்டம் இது. சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுக்கிறா மாதிரி ஷுட்டிங் ஸ்பாட்டில் போய் வருமான வரித்துறை அதிகாரிகள் அராஜகம் பண்ண, அதற்கு ஆதரவா பி.ஜே.பி யினர் அட்ராசிட்டி பண்ண வேன்மீது ஏறி ஒற்றை செல்பி எடுத்தார் விஜய். இதோ இன்றுவரை பல டிவிக்களில் விஜய் தான் விவாதப்பொருள்.
சர்கார் படத்தில் அவர் செய்த ஒருவிரல் புரட்சியை விட இந்த ஒரு செல்பி புரட்சி விஜய்க்கு பெரிய அந்தஸ்த்தை கொடுத்துள்ளது. விசாரிக்கிறது தப்பில்ல..எப்படி விசாரிக்கணும் என்பதில் தான் கவனம் தேவை என்கிறார்கள் சமூகர்கள். எப்படியோ பி.ஜே.பி தயவால் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு ஒரு மாஸ் பப்ளிசிட்டி கிடைத்து விட்டது