நவம்பர் 29ல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது‘பிரதர்’!

Get real time updates directly on you device, subscribe now.

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன்  ZEE5 இல் பிரதர் திரைப்படத்தைக்  கண்டுகளியுங்கள்.

கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.