இயக்குநர்களில் முதன்மையானவராக நிரூபித்தவர்-சக்தி சௌந்தர் ராஜன்!

திரையுலகில் வெகு சில இயக்குநர்களே தங்கள் வழக்கமான படைப்புலகத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தர முயல்வார்கள். அத்தைகைய தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது
படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன் ஆனால் ஆர்யா மற்றும் ஸ்வரூப் தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இப்படம் இருக்கும் என்றார்.
#Captain #கேப்டன்