ஆர்யா,சக்திசௌந்தர்ராஜன் கூட்டணியில் புதியபடம்!

Get real time updates directly on you device, subscribe now.

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் கேப்டன்.இயக்குநர் சக்திசௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் வகைத் திரைப்படம். டெடி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யா,சக்திசௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியிருப்பதால் இப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts
1 of 8

இவ்விழாவினில் நடிகர் ஆர்யா கூறியதாவது..,

நாங்கள் இந்தக் கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குநர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்தப் படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்துச் செய்துள்ளோம். ஒரு பிரமாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இமான் சார் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை நன்றி என்றார்.

#captain #கேப்டன்