சுந்தர்.சி யின் சரித்திரப் படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெறும் ஸ்ருதிஹாசன்!

kv

ழகும், நடிப்புத்திறனும் ஒருங்கே பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன், பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார்.

Related Posts
1 of 4

இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைப்பயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர்.

பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும், பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.