கார்பன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் 25-ஆவது படம் கார்பன். எழுதியதை நகல் எடுக்க பயன்படும் தாளை கார்பன் தாள் என்போம். இந்தப்படத்தில் நடக்கப்போகும் விசயம் நகல் எடுத்தது போல விதார்த்தின் கனவில் வருகிறது. அப்படி அவரது அப்பாவிற்கு ஒரு அசம்பாவிதம் நடப்பதாய் அவருக்கு கனவு வருகிறது. அந்தக்கனவு நிஜமாகவும் மாறுகிறது. ஆனால் அதற்குப் பின்னால் பலப்பல பின்னல்கள் நிறைந்த ட்விட்ஸ்கள் இருக்க…முடிவில் எல்லா முடிச்சுகளும் எப்படி அவிழ்க்கப்பட்டன என்பதே கார்பன் படத்தின் கதை

நல்ல உயிரோட்டமான கதை என்பதால் மேலோட்டமான நடிப்பை தவிர்த்து நல்ல நடிப்பையே வழங்கியிருக்கிறார் நடிகர் விதார்த். அவரது அப்பாவாக வரும் மாரிமுத்து எமோஷ்னல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஹீரோயின் தான்யா அநாசயமாக ஸ்கோர் செய்துவிடுகிறார். படத்தில் இம்மூவர் கேரக்டர்கள் தவிர்த்து ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களும் ரசிக்கும் படியாகவே இருப்பது சிறப்பு

திரைக்கதை தான் இப்படத்தின் ஆதியும் அந்தமும். அதை சிறப்பாகச் செய்திருக்கிறார் இயக்குநர் சீனுவாசன். சாம்.சி.எஸ் இசை படத்திற்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதே ஆறுதல். எளிய லொக்கேசன்களிலே நல்ல feel good விஷுவல் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்

மாநாடு, ஜாங்கோ பட வரிசையில் இப்படமும் பேண்டஜி வகை என்றாலும் பேண்டஜிக்குள் ஓரளவு எதார்த்தம் இருப்பதால் படத்தை நன்றாகவே ரசிக்க முடிகிறது. படத்தில் பல இடங்களில் பட்ஜெட் எட்டிப்பார்ப்பது சின்னகுறை. ஆரம்பகாட்சிகளில் சிறிய சலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. பின்பாதியின் வேகமும் விவேகமும் நம்மை அனைத்துப் பிழைகளையும் மறக்கச் செய்துவிடுகின்றன.

கார்பன்- வெல்டன்

3.5/5