நாய்சேகர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.


மிருகங்களை மையப்படுத்திய படங்கள் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ராம.நாராயணன் தான். அவரது படப்பாணியிலே ஒரு படம் தான் நாய்சேகர். நாயை மையக்கதையாக கொண்டு உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

ஐடி இளைஞனான ஹீரோ சதிஷை ஒரு ஆராய்ச்சியாளரின் நாய் கடித்துவிடுகிறது. கடித்த நாயின் டி.என்.ஏ சதிஷுக்குள் கலந்துவிடுகிறது. அடுத்து சதிஷின் டி.என்.ஏ நாய்க்குள் மிக்ஸ் ஆகிறது. கடித்த நாய் மனிதனின் செயல்களை செய்ய…கடிபட்ட சதிஷ் நாயின் சேஷ்டைகளைச் செய்ய…முடிவில் என்ன ஆனார் நாய்சேகர்?

கதையின் நாயகனாக சதிஷ் ஓரளவு தேறிவிடுகிறார். நல்லவேளை க்ளைமாக்ஸில் அவருக்கு மாஸ் பைட் கொடுக்கவில்லை. நாயகியும் ஓ.கே ரகமே. ஆராய்ச்சியாளராக வரும் ஜார்ஜ் மரியான், வில்லனாக வரும் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஒன்லைன்கள் பல இடங்களில் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. படத்தின் திரைக்கதையும் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் விறுவிறுப்பிற்கும் சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டார் இயக்குநர்.

சிறியபட்ஜெட் படம் என்றாலும் சிஜி கேமரா வொர்க் ஆகியவற்றில் நல்ல மெனக்கெடல் தெரிகிறது. நாயை கார் ஓட்ட வைப்பது, பைட் பண்ண வைப்பது என அதி பயங்கர உழைப்பை கொடுத்துள்ளது படக்குழு. குழந்தைகள் மற்றும் குடும்பங்களை குறி வைத்துள்ள நாய்சேகர் தான் இந்தப்பொங்கலின் ஹீரோ

3.5/5