ரீ- எண்ட்ரிக்காக சார்மி போட்ட ப்ளான்!

Get real time updates directly on you device, subscribe now.

charmi

30 வயதைத் தாண்டிய அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளே புதிதாக வரும் நடிகைகளுடன் போட்டி போட்டு வருகிறார்கள்.

ஆனால் 28 வயதே ஆன சார்மிக்கு திடீரென்று தெலுங்கில் மார்க்கெட் இறங்கு முகம் கண்டுள்ளது.

புதுப்பட வாய்ப்புகள் வராததால் சொந்தமாக ஜோதிலட்சுமி படத்தை தயாரித்து நடித்தார். அதுவும் கை கொடுக்காததால் தனது தேக்கத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவருக்கு உடம்பை குறைக்கும் ஐடியாவைச் சொல்லியிருக்கிறார்களாம் அவரது நலம் விரும்பிகள்.

கொஞ்சம் குண்டாகவே இருக்கும் சார்மி தனது உடம்பை கணிசமாக குறைத்து மீண்டும் ஒரு ரீ-எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதனால் ஜிம்மே கதியென்று கிடக்கும் சார்மி உடம்பை குறைத்தவுடன் புதுப்பட வாய்ப்பு வேட்டையாடப் போகிறாராம்.

ரெண்டு படங்கள்ல நடிக்கிறதுக்கு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அதற்காகத்தான் எனது வெயிட்டை குறைக்க முடிவு செய்தேன். விட்ட இடத்தை இந்த ரவுண்ட்டில் பிடித்து விடுவேன் என்கிறார் சார்மி.