கசிய விட்டார் வில்லன்? : கதற விட்டார் ஷங்கர்!

Get real time updates directly on you device, subscribe now.

shankar

ங்கர் படத்தைப் பொருத்தவரை அவரது படம் ரிலீசாகும் வரை அந்தப் படத்தைப் பற்றிய ரகசியங்கள் வெளிவராமல் பார்த்துக் கொள்வார்.

அதற்காக அவர் படப்பிடிப்புக்கு மட்டும் எப்போதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். அப்படித்தான் ரஜினியை வைத்து அவர் இயக்கி வரும் எந்திரன் 2 படத்தின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

என்னதான் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தாலும் அவர் படத்தில் நடிக்கும், நடிகர், நடிகைகளில் யாராவது ஒருவர் ஆர்வம் மிகுதியில் படத்தின் சில ரகசியங்களை கசிய விட்டு விடுகிறார்கள்.

விஞ்ஞானி, ரோபோ என இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்கும் இந்த ‘2.0’ படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில் டெல்லியில் படமாக்கப்பட்டது.

Related Posts
1 of 67

படத்தில் அவர் மட்டும் தான் வில்லன் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, இன்னொரு வில்லனும் படத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆமாம் பிரபல ஹிந்தி இளம் நடிகர் சுதன்ஷு பாண்டே அந்த இன்னொரு வில்லன்.

அஜீத் நடித்த ‘பில்லா 2’ படத்தில் நடித்த இவரிடம் எந்திரன் 2 படத்தில் தனக்கு தரப்பட்ட கேரக்டர் பற்றிய ரகசியத்தை மீடியாக்களிடம் வாய் தவறி சொல்லி விட்டார்.

கதைப்படி இறந்து விடும் விஞ்ஞானி டேனியின் மகனாக சுதன்ஷு நடிக்கிறார். அவரும் விஞ்ஞானி. அப்பாவை கொன்றதற்காக ரோபோ ரஜினியை பழி வாங்கும் வேடத்தில் இவர் நடிக்கிறாராம்.

இந்த தகவலை மீடியாக்கள் பெருமளவில் பரப்பி விட கடுப்பான ஷங்கர் சுதன்ஷீ பாண்டேவை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.

இப்போது மீடியா என்று யார் வந்தாலும் மெளனமான புன்னகையையே பதிலாகத் தருகிறார் பாண்டே!