மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனது இசை மழையால் பல வெற்றிப் படங்களுக்கு உயிரூட்டிய என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பை கையாளுகிறார்.’கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.