டெஸ்ட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு எமோஷ்னல் கிரிக்கெட் இந்த டெஸ்ட்

எரிபொருளை மிச்சப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்து, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார் ஹீரோ மாதவன். அதற்கான போராட்டத்தில் அவர் சாதித்தது என்ன? தன் காதல் கணவனான மாதவனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத நயன் தாரா ஒரு குழைந்தைக்காக மருத்துவ முயற்சிகளை மேற்கொள்கிறார். அவர் முயற்சி வெற்றி பெற்றதா? சித்தார்த் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் ப்ளேயர். அவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும்போது ஒரு சிக்கல் வருகிறது. அதன் தீர்வு என்ன? இந்த மூவரின் இலக்குகளும் பிரச்சனைகளுன் ஒன்றிணைவது தான் படத்தின் கதை

சும்மா சொல்லக்கூடாது. மாதவன் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். நயன்தாரா கேரக்டரில் பெரிதாக க்ளாரிட்டி இல்லை. இருந்தும் அவர் தனது நடிப்பைச் சரிவர பதிவு செய்துள்ளார். சித்தார்த் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை வில்லங்கம் இன்றிச் செய்துள்ளார். மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்பட அனைவரும் தரமாக நடித்துள்ளனர்

Related Posts
1 of 2

படத்தில் ஒளிப்பதிவு டீசண்டாக அமைந்துள்ளது. கேமராமேன் விராஜ் சிங் கோஹில்& அவர் டீமிற்கு பாராட்டுக்கள். பின்னணி இசையில் கதையை சுவாரஸ்யமாக நகர்த்து உதவியுள்ளார் இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன்

மூன்று பேரின் இலக்குகளை ஒற்றைப் புள்ளியில் நிறுத்தும் இடம் வரை படம் பரபரப்பாக பயணித்தது. அதன் பின் கதை எங்கு போகிறதென்றே தெரியாமல் தடுமாறிவிட்டது. பின்பாதியின் திரைக்கதையைச் சரியாக கட்டமைத்திருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்

டெஸ்ட்- ஜஸ்ட் மிஸ்
2.75/5