யோகிபாபுவுடன் முதன்முறையாக நடிக்கும் நடிகை!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது.இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி’ முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.

நடிகை வாணி போஜன் கூறுகையில்,

Related Posts
1 of 12

 “டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்” என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.