பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா ஓவியா : இதுதான் காரணமாமே?

Get real time updates directly on you device, subscribe now.

oviya

‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பேரும், புகழும் நடிகை ஓவியாவுக்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைத்தது.

குறும்புத்தனங்கள் நிறைந்த அவருடைய நல்லவிதமான நடவடிக்கைகளுக்காகவே அந்த நிகழ்ச்சியை இளைஞர்கள் தொடர்ந்து ரசித்து வருகின்றனர்.

அதோடு ஒவ்வொரு வாரமும் வீட்டில் இருக்கும் மற்ற பிரபலங்கள் ஓவியாவை வெளியேற்ற முயற்சி செய்தாலும், வெளியில் இருக்கும் ரசிகர்களோ ஓவியாவுக்கு ஓட்டுக்களைப் போட்டு ஒவ்வொரு வாரமும் காப்பாற்றி வருகிறார்கள்.

Related Posts
1 of 12

அந்தளவுக்கு ரசிகர்களின் பேராதரவைப் பெற்று பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து இருந்து வரும் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜூலி, ரைசா உள்ளிட்டவர்களின்  நடவடிக்கைகள் ஓவியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், மேலும், அவருடைய உடல் நிலை சரியில்லை எனக் கூறியும், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றும் படி விஜய் டிவி நிர்வாகத்திடம் தொடர்ந்து தெரிவித்து வந்தாராம்.

அவர் கேட்டுக் கொண்டதாலேயே அவருக்கு பதிலாகவே  இந்த வாரம் நடிகை பிந்து மாதவியை பிக்பாஸ் வீட்டுக்குள் இறக்கி விட்டிருக்கிறது விஜய் டிவி என்கிறார்கள்.

 ஓவியா வெளியேறுவாரா? மாட்டாரா? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தெரிந்து விடும் என்றாலும் ஒருவேளை ஓவியா வெளியேறினால் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டோம் என்று சொல்லும் ரசிகர்கள் அவர் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எந்தளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.