என்னுடைய ஸ்கூல் லைஃப் பற்றி படமெடுக்க வேண்டும் – நடிகர் யோகி பாபு!

Get real time updates directly on you device, subscribe now.

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்க, யோகிபாபு நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்கூல்”. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Related Posts
1 of 6

இந்நிகழ்வினில் நடிகர் யோகிபாபு பேசியதாவது…

மிகவும் சந்தோசமாக இருக்கிறது. “ஸ்கூல்” இந்தப்படத்திற்கு முதலில் வித்யாதரன் சார் என்னைக் கூப்பிடும்போது, பியூன் கேரக்டருக்குத்தான் கூப்பிட்டார். வாத்தியார் கேரக்டருக்கு ஆள் வரவில்லை என்று நினைக்கிறேன், என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். நான் படித்ததெல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் தான். நான் படிச்ச ஸ்கூல் கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். வித்யாதரன் சார் மனது வைத்தால், கண்டிப்பாக அதைப் படம் செய்துவிடலாம். தாமு அண்ணன் வந்துள்ளார். அவரைப் பார்த்துத் தான் நானெல்லாம் நடிக்க வந்தேன், அவரோடு நடிக்க ஆசை, அண்ணா மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர் தான் ராஜா. மிக அருமையான இசையைத் தந்துள்ளார். அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.