கான்சிட்டி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட லக்கி பாஸ்கர் படத்தின் ஸ்டைலில் ஒருபடம்

2017-ஆம் ஆண்டில் நடக்கும் கதையில் அர்ஜுன் தாஸ், அன்னாபென், வடிவக்கரசி, யோகிபாபு, சிறுவன் ஆதவன் ஒன்றாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் அல்ல கர்நாடகத்தில். சென்னையிலுள்ள ஒரு கேரக்டர் வந்து சிறுவன் ஆதவனை கடத்திச் செல்கிறது. அவர் யார்? என்ற கேள்வியின் வழியாக கதை 2010- கால கட்டத்திற்கு செல்கிறது. 2010-ல் அர்ஜுன் தாஸ் EB ஆபிஸில் வேலை செய்கிறார். தன் கஷ்டத்தை காரணம் வைத்து, லாஸ்ட் டேட் வருவதற்கு முன்பே EB பில் கட்ட வரும் மக்கள் பணத்தைக்கொண்டு பங்குச்சந்தையில் ஈடுபடுகிறார். வெவ்வேறு சூழலில் உள்ள வடிவக்கரசி யோகிபாபு, அன்னாபென் ஆதவன், அர்ஜுன் தாஸோடு கனெக்ட் ஆகிறார்கள். பேராசை அவர்களை ஒரு சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதன்பின் அவர்கள் எப்படி அதிலிருந்து மீண்டார்கள் என்பது மீதிக்கதை

அர்ஜுன் தாஸ் இயல்பாக நடித்துள்ளார். சிற்சில காட்சிகளில் இன்னுமே அவரது நடிப்பில் மெச்சூட் கூடியிருக்க வேண்டும். அன்னாபென் வழக்கம் போல தனது கேரக்டருக்குச் சிறப்புச் செய்துள்ளார். யோகிபாபுவிற்கு இப்படத்தில் காமெடி எமோஷ்னல் என இரண்டு முகம். இரண்டிலும் பின்னியுள்ளார். வடிவக்கரசி எதிர்பார்த்ததை விட அசத்தலான பெர்பாமன்ஸை கொடுத்துள்ளார். ஆதவன், அருள்தாஸ், விடிவி கணேஷ், ரமேஷ்திலக், அருவி மதன் என எல்லா கேரக்டர்களும் அவரவர் எல்லைக்குட்பட்டு நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்

ஷான் ரோல்டன் தனது இசையால் நல்ல எனர்ஜியைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் தரமான விஷுவல்ஸை கொடுத்துள்ளார்

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் லாஜிக்கை விட மேஜிக்கை நம்பியுள்ளார். காட்சிகளின் விறுவிறு நகர்வுகளில் அதை உணர முடிகிறது. திரைக்கதையில் நம்பவே முடியாத சம்பவங்கள் இருந்தாலும், அவற்றை நன்றாகவே செய்துள்ளார். படத்தின் முடிவில் ஒரு மெசேஜ் சொல்ல இடமிருந்தும் அதைத்தவிர்த்துள்ளார் இயக்குநர். பலமுறை குறை சொல்லும் வாய்ப்பிருந்தும் ஒருமுறை பார்க்கலாம் என்ற கேட்டகிரி படமிது
2.75/5