கான்ஜுரிங் கண்ணப்பன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பழைய பார்மட் மேக்கிங், கொஞ்சம் டிபரண்டான கதை! கான்ஜுரிங் கண்ணப்பன் ரெடி

நிஜ உலகில் ஒரு கேம் டெவலப்பராக மாற ஆசைப்படும் சதிஷ் பாழடைந்த தன் வீட்டுப் பாழுங்கிணற்றில் 1930-ஆம் ஆண்டு போடப்பட்ட ட்ரீம்கேச்சர் என்ற ஒரு பொருளைத் தொட்டு அதிலுள்ள ஒரு இறகைப் பிய்த்து விடுகிறார். அதனால் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பேய்பங்களாவிற்குள் அவரைச் செல்ல வைக்கிறது ஒரு அமானுஷ்யம். . அதுவொரு கனவு உலகம். அங்கு அவருக்கு பேய்களால் ஏற்படும் காயங்கள் எல்லாம் நிஜத்திலும் தொடர்கிறது. இந்த வித்தியாசமான பிரச்சனையை எப்படி சதிஷ் கையாண்டார். கதையின் போக்கில் இன்னும் யாரெல்லாம் அந்த பங்களாவிற்குள் வந்தார்கள் என்பதாக படத்தின் மிச்சசொச்ச கதை அமைந்துள்ளது

அளவைத் தாண்டாத நடிப்பால் ஆறுதல் அளிக்கிறார் சதிஷ். ஆனந்த்ராஜ் படத்திற்கு ஆபத்பாந்தவனாக இருக்கிறார். கிங்க்ஸ்ட்லி அடிக்கும் சில பன்ச்கள் எடுபடவில்லை. சில பன்ச்கள் வொர்க்கவுட் ஆகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் செய்யும் காமெடியை விட அவர் கணவராக வரும் விடிவி கணேஷ் செம்மயாக ஸ்கோர் செய்துள்ளார். நாயகி ரெஜினா கசன்ட்ரா அவரது கேரக்டருக்குள் பக்காவாக பொருந்தியுள்ளார். நாசர் ஓகே ரகம். நமோ நாராயணன் சிறப்பு.

யுவனின் இசையில் தூங்காமல் இருப்பதற்காக வரும் பாடல் ஒன்று சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் ஓப்பி அடிக்காமல் ஓரளவு ஒப்பேத்திவிட்டுள்ளார். யுவாவின் ஒளிப்பதிவு நல்ல குவாலிட்டியோடு அமைந்துள்ளது. சின்னக் கிரவுண்டுக்குள் தன்னால் முடிந்த உழைப்பை போட்டுள்ளார்

நல்ல ஒன்லைன் கிடைத்தும் அதை மிகச்சிறந்த அவுட்லைனாக மாற்றவில்லை இயக்குநர். பல குபீர் சிரிப்பை ஏற்படுத்தும் சீக்வென்ஸ்கள் அமைந்தும் அவற்றை சின்ன ஸ்மைல்ஸாக்கி விட்டார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி கிடைத்துள்ளது. இன்னும் புகுந்து விளையாடியிருக்க வேண்டாமா? இருந்தும் சுமார் கேட்டகிரிக்கு மேல் சூப்பர் கேட்டகிரிக்கு கீழ் என பாஸ் ஆகிறார் இந்த கண்ணப்பன்
2.75/5