காட்ஃபாதர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சின்ன பட்ஜெட்டிலும் கொஞ்சம் மெனக்கெட்டால் தரமான படம் கொடுக்கலாம் என்பதற்கு காட்ஃபாதர் படம் சாட்சி.

மகன் மீதான பேரன்போடு வாழும் தகப்பன் நட்டிக்கு வில்லன் லால் எமனாக வருகிறார். அதாவது லாலின் மகனுக்கு இதயத்தில் பிரச்சனை..அவனின் ப்ளட் குருப்போடு ஒத்துப்போகும் நட்டி மகனை வேட்டையாட லால் மற்றும் அவரது அன்கோ துரத்துகிறது. நட்டி தன் மனைவி அனன்யாவோடு எப்படி மகனைக் காப்பாற்றுகிறார் என்பது தான் காட்ஃபாதர்

நட்டிக்கு இது ஒரு அட்டகாசமான படம். க்ளோசப் காட்சிகள் அதிகம் உள்ள அனைத்து ஷாட்களிலும் அதகளப்படுத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸில் பேசும் ஒரு டயலாக் படா மாஸ். அனன்யா அளவாக நடிக்க, குட்டி பையன் அஸ்வந்த் அசத்தி இருக்கிறார். லால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.

படம் ஆரம்பத்தில் பத்து நிமிடம் பெரிதாக சோதித்தது. பின்னணி இசையும் பெரிதாக ஈர்த்தது போல் தெரியவில்லை. ஆனால் இருபது நிமிடங்களில் படத்தில் பற்றிக் கொண்ட தீ அப்படியே படம் நெடுக பரவி விடுகிறது. ஜெகன் ராஜ்சேஜர் திரைக்கதை நச் நச். நவின் ரவிந்திரன் இசையும் சிறப்பு.

படத்தின் லைட்டிங் செட்டப் எல்லாம் கைதி படத்தை நினைவூட்டினாலும் தாறுமாறு உழைப்பு அது.

பெருங்குறையாக லாஜிக் மேட்டர் இடித்தாலும் லாஜிக் மறந்தால் ஒரு மேஜிக் அனுபவத்தைக் கொடுப்பார் காட்ஃபாதர்
3/5