பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5.
சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது.
முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.