தமிழர் உரிமைப் போராட்டங்களுக்குக் கூட வர மாட்டாரா? – அஜீத்தை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்..!

Get real time updates directly on you device, subscribe now.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஷால் என தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இதுபோன்ற நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ளாதவர் நடிகர் அஜீத். இருந்தாலும் கடந்த முறை ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதேபோல இந்தமுறை காவேரி மேலாண்மை ஸ்டெர்லைட் ஆலை ஆகிய மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்த்து நடைபெறும் அறவழிப் போராட்டத்தில் அஜீத் கட்டாயம் கலந்து கொள்வார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல தேவையில்லாத போராட்டங்களில் கலந்து கொண்டு போஸ் கொடுத்து விட்டுப் போகும் அஜீத் இந்த மக்களின் பிரச்சனை சம்பந்தப் பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. போராட்டம் முடியும் நேரமான 1 மணிக்குள் அஜீத் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அஜீத் வரவில்லை.

Related Posts
1 of 75

இதனால் அஜீத்தின் தீவிர ரசிகர்களே சமூகவலைத் தளங்களில் அவரை கிழித்து தொங்க விட்டு விட்டனர்.

”தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் கூட அஜீத் கலந்து கொள்ள மாட்டாரா? வீட்டிலேயே இருந்து விடுவாரா? இதற்கும் திருவான்மியூரில் இருந்து போராட்டம் நடந்த இடத்திற்கு வெறும் 12 கி.மீட்டர் தான். இதற்குக் கூட வரமாட்டாரா?” என்று என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் ஒரு ரசிகர்.

இன்னொரு ரசிகரோ ”தமிழ்ப் படங்களில் நடிச்சு சம்பாதிக்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் கொடுக்கிற பணம் மட்டும் வேணும். ஆனா அவர்களோட வாழ்வாதரத்தைப் பாதிக்கிற பிரச்சனைகளில் குரல் கொடுக்கவோ அல்லது போராட்டங்களில் கலந்து கொள்ளவோ மாட்டாரா? இது என்ன மாதிரியான மனித நேயம்? இப்படிப்பட்டவரையா நாங்கள் ‘தல’ என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்? அதை நெனைச்சாலே ரொம்பக் கேவலமா இருக்கு? என்று அஜீத்தை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

இப்படி பல ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்ளாததை சுட்டிக்காட்டி சமூகவலைத் தளங்களில் கொந்தளித்திருக்கிறார்கள்.