உடம்பு பெருத்த சிம்பு : எல்லாம் நல்லதுக்குத்தானாம்…!!

Get real time updates directly on you device, subscribe now.

simbu1

ல ரிலீஸ் தேதிகளை அறிவிக்கப்பட்ட ‘இது நம்ம ஆளு’ படத்தை ஒரு வழியாக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் ரிலீஸ் செய்து விட்டார்.

படம் ஓரளவுக்கு கல்லா கட்டினாலும் படத்தின் ஒரு குத்தாட்ட பாடல் காட்சிகளில் சிம்புவின் பெருத்த உடம்பைப் பார்த்து அவரது ரசிகர்களே வருத்தப்பட்டது உண்மை.

பட வாய்ப்பே இல்லாமல் வீட்டில் சும்மா இருந்ததால் எடை கூடி விட்டதோ? என்று எல்லோரும் சிம்புவை நக்கல் செய்தார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல…

Related Posts
1 of 34

சிம்பு புதிதாக நடிக்க இருக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஒரு கேரக்டருக்காக போட்ட வெயிட் தான் அதுவாம்.

”என்னோட புதுப்படத்துக்காக வெயிட் போட்டுக்கிட்டிருந்த நேரத்துல தான் இது நம்ம ஆளு படத்துல ஒரே ஒரு குத்தாட்ட பாட்டை எடுத்தோம். அதனால் அந்த பாட்டுல நான் குண்டா தெரிஞ்சேன். என்னால அந்த பாட்டுக்கு டான்ஸ் கூட ஆட முடியல… ஆனாலும்  கேரக்டருக்கு தேவைப்படுறதால வெயிட் போட்டிருக்கேன்.

மத்தபடி நாம் வீட்ல சும்மா இருந்ததால போட்ட வெயிட் இல்ல” என்கிறார் சிம்பு.

கடமை முக்கியம் அமைச்சரே…