ZEE5 தளத்தில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” புது வெர்ஷன் ஸ்ட்ரீமாகிறது!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான ZEE5 தென்னிந்திய ரசிகர்களுக்கு, பிரத்தியேகமாக அவர்களுக்கு விருப்பமான மொழியில், பல சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடான “டிடி நெக்ஸ்ட் லெவல்” வெளியீட்டின் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் புது வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

Related Posts
1 of 6

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ZEE5 இல் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவரும் வகையில், படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்ட பல காட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் கண்டிராத புதிய காட்சிகளுடன் இந்த எக்ஸ்டெண்டட் வெர்ஷன், முழுமையான புது அனுபவமாக, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“டிடி நெக்ஸ்ட் லெவல்” நீக்க்ப்பட்ட காட்சிகளுடனான புது வெர்ஷன் திரைப்படத்தினை ZEE5 தளத்தில் விரைவில் கண்டுகளியுங்கள் !!