சென்னை கால்பந்து அணிக்காக ”கோல் போட்ட” ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!

Get real time updates directly on you device, subscribe now.

arr

விளையாட்டுக்கும், இசைக்கும் சம்மந்தம் இருக்கும் என யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஏ. ஆர். ரஹ்மானுடைய சகோதரியின் மகன் ஏ.எச். காஸிப் இசையமைப்பில் தயாராகி ரிலீசாகியிருக்கும் ‘கோல் போடு’ என்ற பாடல் இசைக்கும், விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ள தெளிவாக விளக்குகிறது.

‘இசைக்கும், விளையாட்டு துறைக்கும் மனித குலம் தோன்றியக் காலத்தில் இருந்தே உறவு நீடித்துக் கொண்டே வருகிறது. பாரம்பரியம் மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும், நம்மோடு வாழ்ந்த கால்பந்து விளையாட்டுக்கும் காலத்தையும் தாண்டிய உறவு இருந்து கொண்டேயிருக்கிறது. இதை சுட்டிக் காட்டி இப்பொழுது ‘கோல் போடு’ என்ற பாடலை பதிவு செய்து இருக்கிறோம்.

ஐ.பி.எல் போலவே சென்னையில் கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் ரோஹித் ரமேஷின் சென்னை சிட்டி கால் பந்து அணிக்காக உருவாக்கிய பாடல் இது. சென்னை மக்களுக்கு கால்பந்து மேல் உள்ள பிரியத்தை அடையாளம் காட்டும் பாடலாக இருக்கும் ‘கோல் போடு’. பிரபல ஹிந்தி பாடகரும் இசை அமைப்பாளருமான விஷால் தட்லாணி இந்தப் பாடலை பாடி இருக்கிறார். மோகன் ராஜ் பாடலை எழுதியிருக்கிறார்.

லண்டன் பி.பி.சி நடத்தும் அஷாந்தி ஒம்காரின் ஷோவில் இந்த வாரத்துக்கான பாடலாக ‘கோல் போடு’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னை நகருக்கும், கால் பந்துக்கும் உள்ள காதலை ஒரு வீடியோவாக வெளியிடுகிறோம். இதை இயக்கியிருப்பவர் இளம் இயக்குனர் அஷ்வின் ரவீந்தரன். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் ஜி கே ஒளிப்பதிவில், சுரேஷ் சத்யா நடனம் அமைக்க, பிரபல ஆடை அலங்கார நிபுணர் சத்யா, ஏ எச் காசிப் மற்றும் விஷால் தட்லாணி ஆகியோருக்கு உடை அலங்காரம் செய்கிறார்.