குட் டே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

குடிப்பழக்கத்தின் தீமையைச் சொல்கிறது இந்த குட் டே

காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டரின் சீருடை மற்றும் வாக்கி டாக்கியைத் தூக்கிச் செல்கிறார் ஹீரோ பிரித்விராஜ். அவரை அப்படிச் செய்ய வைத்தது என்ன என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் ஹீரோ அங்குள்ள பெண்களை தவறாக டீல் செய்யும் மேனஜரைக் கண்டிக்கிறார். அதனால் வேலையில் ஹீரோவிற்குப் பிரச்சனை வருகிறது. அது அவரை குடியை நோக்கித் தள்ளுகிறது. குடிதான் அவரை காவல்நிலையம் வரை கொண்டு வருகிறது. அதன் பின் கதையில் நடக்கும் விசயங்கள் தான் படத்தின் திரைக்கதையாக விரிகிறது

பிரித்விராஜ் ஒரு தேர்ந்த குடிகாரனைப் போல சிறப்பாக நடித்துள்ளார். மைனா நந்தினி போர்ஷனை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாமே என்றெண்ணும் படி அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார். காளி வெங்கட் முதல் போஸ் வெங்கட் வரை இதர நட்சத்திரங்கள் யாவரும் ஒகே ரகம்

மதன் குணதேவ் தன் கேமராவை வைத்து கூடுமான வரை படத்தைத் தேத்தியுள்ளார். படத்தில் எடிட்டிங்கும் அவரே. கோவிந்த் வசந்தா இசையில் கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் பரவாயில்லை. கூடுதல் வசனமும் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை பூர்ணா ஜெஸ் மைக்கேல் சிறப்பாக எழுத முயற்சித்துள்ளார்.

மேக்கிங் ஆக படம் ஒரு டீசண்ட் அப்ரோஜ்-ஆக அமைந்துள்ளது. அந்த வகையில் இயக்குநர் N.அரவிந்தனைப் பாராட்டலாம். நல்ல விசயத்தைப் பேசிய படம் இன்னும் மெனக்கெடலோடு எடுக்கப்பட்டிருந்தால் மிகச்சிறந்தபடமாக மாறியிருக்கும்

Good day- Okay
2.75/5