‘டிமான்டி காலனி 2’ உரிமையை பெற்ற BTG யுனிவர்சல்!
பொழுதுபோக்கு ஊடக உலகில் உலகமயமாக்கல் பல தொழில் முனைவோர்களை, குறிப்பாக மென்பொருள் துறையில் இருந்தும் இதை ஆர்வத்துடன் மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது. இன்று பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஊடகத் துறையை மிகவும் லாபம் தரக்கூடிய ஒரு தொழில் என ஒப்புக் கொண்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இது பல முன்னணி உயர்நிலை வணிக நிறுவனங்கள் சினிமாத் துறையில் தயாரிப்பு முயற்சியைத் தொடங்குவதற்கு உதவியது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் திரு. பாபி பாலச்சந்திரன். இவர் எக்ஸ்டெரோவின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. இது சைபர் தடயவியல், சட்ட ஆளுமை ஆபத்து மற்றும் இணக்கம் (GRC) மற்றும் டேட்டா பிரைவசி ஸ்பேஸ் ஆகியவற்றில் முன்னணி பன்னாட்டு SaaS யூனிகார்ன் நிறுவனமாகும்.
பாபி பாலச்சந்திரன் BTG Universal-ஐ தொடங்கியுள்ளார். இந்த மீடியா தயாரிப்பு நிறுவனம் ஹாலிவுட் சினிமா, இந்திய சினிமா மற்றும் பிரத்யேக டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பல வருட அனுபவத்துடன் ஏற்கனவே சினிமா தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான Dr.M.மனோஜ் பெனோ அவர்கள் இந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படங்களில் பணிபுரிந்துள்ளார். பல தரமான திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் ஹாலிவுட் மற்றும் இந்தியா இரண்டிலும் ஊடகத் துறையில் பாபி அடியெடுத்து வைக்கிறார். யுனைடெட் ஸ்டேட்ஸை தளமாகக் கொண்ட பாபி, பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத்தையும் பொழுதுபோக்கையும் கடந்து மற்றத் துறைகளிலும் வெற்றிகளை கொடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவர் இந்த பணியை அர்ப்பணிப்புள்ள குழுவிடம் ஒப்படைத்துள்ளார். கம்பெனியின் தொலைநோக்குப் பார்வையானது, பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் அனைத்து துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமாண்டி காலனி 2’ படத்தின் முழு உரிமையையும் பெற்று தனது பிரம்மாண்டமான தொடக்கத்தை BTG யுனிவர்சல் அறிவித்துள்ளது.