கார்த்தியின் அடுத்த காக்கி சட்டை அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

Get real time updates directly on you device, subscribe now.

karthi

சூப்பர் ஹிட்டான ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு இப்பொழுது மீண்டும் “தீரன் அதிகாரம் ஒன்று” படம் மூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார்.

அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக இப்படத்தின் கதை அமைத்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ புகழ் H.வினோத் கதை, திரைகதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார்.

நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தில் மிரட்டலாக ஒளிப்பதிவு செய்த சத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R. பிரகாஷ்பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது.