‘டீசல்’ படத்தில் இசையால் மைலேஜ் ஏற்றியிருக்கிறார் திபு நினன் தாமஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் ‘கனா’, ‘பேச்சுலர்’ படத்தின் ‘அடியே’ பாடல், சித்தார்த்தின் ‘சித்தா’ என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘ARM’ மலையாளப் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். அவர் மெல்லிசைகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவார் என்ற எண்ணத்தை உடைத்து, ‘டீசல்’ படத்தில் கானா ஸ்டைலில் ‘பீர் சாங்’ மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Related Posts
1 of 5

‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.அவரது ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.’டீசல்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.