லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Related Posts
1 of 5

ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.