‘ஹிப்பி’ பட நாயகிக்கு தாதாசாகெப் பால்கே விருது!

Get real time updates directly on you device, subscribe now.

‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா தமிழில் இயக்கி வரும் படம் ஹிப்பி. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற RX 100 பட நாயகன் கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் டிகங்கனா சூர்யவன்ஷி.

இளம் நடிகையான இவருக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஒரே வருடத்தில் மூன்று ஹிந்தி படங்களில் நடித்ததற்காக இந்த விருதினை அவர் வாங்கியிருக்கிறார்.

தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.