வெற்றிமாறன் உதவியாளர் இயக்கத்தில் விக்ரம் பிரபு!
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி தயாரிப்பில், வெற்றிமாறன் உதவியாளர் இப்படத்தை இயக்குகிறார்!!
விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று, வர்த்தக ரீதியாகவும் வெற்றியடைந்த ‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ படத்தை தயாரித்து வருகிறது.
கோடையில் வெளியாகவிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இப்படம் தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது.
இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த தமிழரசன் இப்படத்தை இயக்குகிறார். அமேசான் பிரைமின் முதல் தமிழ் வெப் சீரிஸ் ‘வெள்ள ராஜா’விற்கு ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.