பாலா படத்தில் ஜோதிகா எப்படி? : எல்லாம் சூர்யா சொன்ன ஒரு வார்த்தைக்காக..!

Get real time updates directly on you device, subscribe now.

‘தாரை தப்பட்டை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் இயக்குநர் பாலா.

எப்பேர்ப்பட்ட இயக்குநர் இப்படி புதுமுகங்களை நம்பி இறங்கி வந்து விட்டாரே? என்கிற விமர்சனங்களும் அப்போது கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கப்பட்டது.

அதன்பிறகு அந்தப்படம் குறித்தான எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், ஜோதிகாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் பாலா.

EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனமும், பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகாவுக்கு இந்தப் படத்தில் எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற விபரமும் வெளியிடப்படவில்லை.

Related Posts
1 of 49

அதே சமயம் இந்தப் படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் ஒருவரும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என பாலா தரப்பு கூறுகிறது.

பொதுவாக பாலா படங்களில் நடிப்பு என்றாலே முன்னணி நடிகைகளே தலை தெறிக்க ஓடுவார்கள். ‘ரியாலிட்டி’ என்கிற பெயரில் வெயிலில் காய விடுவது, செருப்பு போடாமல் நடக்க விடுவது, நிஜமாகவே அடி வாங்குவது என படப்பிடிப்பில் அவர்கள் பல கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வரும். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் நடிக்க ஜோதிகாவுக்கு முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்ததாம்.

ஆனால் சூர்யா தான் நந்தாவும், பிதாமகனும் சேர்ந்த கலவையாச்சே?

”பாலா அண்ணன் படம் தானே; பயப்படாம நடி; எந்த டென்ஷனும் இருக்காது உன்னை அவரோட பொண்ணு மாதிரி பார்த்துப்பார்” என்று அவர் சொன்ன அந்த நம்பிக்கை வார்த்தைகள் தான் பாலா இயக்கத்தில் நடிக்க ஜோதிகாவின் க்ரீன் சிக்னல் கொடுக்க முக்கிய காரணமாம்.

மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினைப் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.