கிரிக்கெட் போட்டியை ஒத்தி வையுங்கள், மீறி நடத்தினால்..? – பாரதிராஜா காட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை நடத்த வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஆனால் இங்கே போராட்டங்களை நடைபெறும் போது கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இளைஞர்களை திசை திருப்பும் வேலையைச் செய்ய வேண்டாம், அப்படிச் செய்தால் கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொந்தளிப்பான நிலையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

Related Posts
1 of 2,307

அந்த அறிக்கையில், ”ஐ.பி.எல் எனும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசியப் புரட்சிக்கு தீ வைக்கும் முட்டாள்த்தனமான விளையாட்டை நிராகரிப்போம், தமிழா ஐ.பி.எல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி, நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம்”.

”ஐ.பி.எல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. விளையாட்டை கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐ.பி.எல் விளையாட்டாக இருக்காது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.