‘ஹாய்’ டிரெய்லர்க்கு ரெஸ்பான்ஸ் எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

 

நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுள்ளதா ஹாய் பட ட்ரெய்லர்?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.

மறைந்த இயக்குநர் நடிகர்  கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனுபவமுள்ளவர்கள் டிரெய்லரில் வருவதும் கவனம் பெறுகிறது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

புதிய வெளியீட்டு அறிவிப்பின்படி, ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.