அன்று என்ன வேணும்? என்று கேட்ட விஜய்..இன்று கண்டுக்கவே இல்லை

Get real time updates directly on you device, subscribe now.


நடிகர் விஜய் கரியரில் தமிழன் முக்கியமான படம். அப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் ஜிவி தயாரித்திருந்தார். அந்த நேரத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு இப்படம் ஒரு பூஸ்ட் அப் கொடுத்தது. தமிழன் படத்தை மஜித் இயக்கி இருந்தார். அந்தப்படம் முடிந்த சமயத்தில் இயக்குநர் மஜித்திடம் சந்தோசம் பொங்க விஜய், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டதாக மஜித் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். ஆனால் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் மஜித் சென்னையில் உள்ள விஜயா ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

Related Posts
1 of 13

பில் மேல் பில் போட்டு மருத்துவமனை மஜித் குடும்பத்தை அலைக்கழித்துள்ளது. அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாத மஜித் திரையுலகினரிடம் உதவி கேட்க, அம்மா கிரியேசன் சிவா உள்பட பலரும் உதவி இருக்கிறார்கள். மஜித்தும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனால் நடிகர் விஜய்யிடம் இருந்து மஜித்திற்கு எந்த உதவியும் வரவில்லையாம். அன்று என்ன வேண்டும் என்று கேட்டவர் இன்று ஒன்றுமே கேட்கவில்லை. கொடுமை