என்னை முழு மனிதனாக மாற்றியிருக்கிறது ‘சவரக்கத்தி’! – இயக்குனர் ராம் உருக்கமான பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

மிஸ்கினும், ராமும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்கிற தகவல் வந்தததுமே ‘சவரக்கத்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

பயணிப்பது ஒரே தளமாக இருந்தாலும் இருவரும் தனித்தனி அடையாளங்களைக் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அந்த இயக்குநரை நினைக்கும் போது தான் எல்லோரும் பாவமாக ‘உச்’ கொட்டினார்கள்.

நல்லவேளையாக படத்தின் இயக்குநர் மிஸ்கினின் தம்பி என்கிற கூடுதல் தகவல் வந்ததும் ‘அப்பாடா…’ என்றார்கள் ரசிகர்கள்.

Related Posts
1 of 7

இருவரையும் இணைத்து ஒருவழியாக படப்பிடிப்பை முடித்து ரிலீசுக்கும் தேதி குறித்த கையோடு ‘சவரக்கத்தி’ படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம் ‘சவரகத்தி’ படத்தில் நடித்த அனுபவம் தான் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது… ”இந்த உலகில் குடிக்க, அன்பை பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள்? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார்.

என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை ‘சவரகத்தி’ தான். ‘சவரகத்தி’ படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது” என்றார்.

சந்திப்பில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.