தாலி கட்டாமலேயே அஞ்சலியுடன் ஒரே வீட்டில் குடித்தனம்! : தோசையும் கரண்டியுமாக மாட்டிய ஜெய்!
”எங்கேயும் எப்போதும்” படத்தில் சேர்ந்து நடித்த போதே ஜெய் – அஞ்சலி ஜோடியைப் பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் கிளம்பும்.
அதன்பிறகு சித்தியுடன் சொத்துத் தகராறு ஏற்பட்டு ஆந்திரா பக்கம் ஓடியதும் அந்த கிசுகிசு அடங்கிப் போனது.
சொந்த மாநிலமாச்சே? அங்கு எப்படியாவது மிச்ச சொச்ச வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று கணக்கு போட்டவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் மீண்டும் தமிழுக்கு யு டர்ன் அடித்தவருக்கு ”சகலகலா வல்லவன்”, ”இறைவி” என பட வாய்ப்புகள் கிடைக்க, கைவசம் தரமணி உட்பட அரைடஜன் பட வாய்ப்புகள் இருக்கின்றன. கூடவே அடங்கிப் போயிருந்த ஜெய் உடனான காதல் சமாச்சாரங்களும் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.
ஆனால் இந்த முறை கிசுகிசுவெல்லாம் இல்லை. இருவரும் காதலிப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் நம்பும் விதத்தில் இரண்டு புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டதே ஜெய் தான்.
ஆமாம், சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜெய் – அஞ்சலி ஜோடியாக ஒரு வீட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து குடித்தனம் நடத்துகிறார்களோ?? என்கிற சந்தேகத்தை எழுப்பி விட்டிருக்கிறது.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து ‘மகளிர் மட்டும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரில் இடம்பெற்ற தோசை சுடும் காட்சியை வைத்து அந்தப்படத்துக்கு புரமோஷன் செய்யப்பட்டது. அதில் நடிகர் சூர்யாவும் தன் பங்குக்கு தன் மனைவி ஜோதிகாவுக்கு ஆசை ஆசையாக தோசை சுட்டு கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அதே ஸ்டைலில் தான் நடிகர் ஜெய்யும் வீட்டுக் கிச்சனில் நடிகை அஞ்சலிக்கு ஆசை ஆசையாக தோசை சுடுவது போன்றும், அஞ்சலி நைட்டியுடன் ஜெய் தோள் மீது சாய்ந்து சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவும் இருக்கின்றன அந்தப் புகைப்படங்கள்.
ஏற்கனவே ஜெய் கேட்டுக் கொண்டதால் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் சிறிய காட்சி ஒன்றில் நடித்து விட்டுப் போனார் அஞ்சலி. இப்போது இருவருமே சேர்ந்து ‘பலூன்’ என்ற படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கூடுதல் நெருக்கம் தான் இருவரையும் ஒரே வீட்டில் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிற அளவுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறதோ? என்று சந்தேகிக்கிறது கோடம்பாக்க ரசிகர் வட்டம்.
ரசிகர்களின் இந்த சந்தேகத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் ஜெய்.