‘லேபிள்’  வெப் சீரிஸின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபிள்’ சீரிஸின் முதல் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. 

நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தில் உருவாகியுள்ள “லேபிள்” சீரிஸில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 7

பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் “லேபிள்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதன் இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.