டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில்’க்யா லஃப்டா’ பாடல் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது.

க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தனுஞ்சய் சீபனா மற்றும் சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் தங்கள் குரல்கள் மூலம் பாடலை மேலும் உயர்த்தியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது.  பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையில்லை.

Related Posts
1 of 5

டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது.

பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.