காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம்” EMI மாததவணை”!

Get real time updates directly on you device, subscribe now.

சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்கும் படத்திற்கு ” EMI ” மாதத் தவணை ” என்று பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார் சதாசிவம் சின்னராஜ்.கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார் 

சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு .இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.
விடுதலை படத்தின் எடிட்டர் R. ராமர் இந்த படத்தையும் எடிட் செய்துள்ளார், நடன இயக்கத்தை தீனா, சுரேஷ் ஜீத் இருவரும் செய்துள்ளனர்.