எனக்காக அந்த கஷ்டங்களை தாங்கிக் கொண்டார் ப்ரணீதா! : மேடையில் உருகிய டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

pranithaa1

கொட்டி வைத்திருக்கும் அழகுக்கு இந்நேரம் ப்ரணீதா கோடிகளில் சம்பளம் வாங்குகிற நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் சரியான வாய்ப்புகள் தொடர்ச்சியாக அமையாததால் தமிழில் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வருகிறார்.

நல்ல வேளையாக சூர்யாவின் மாஸ் படத்தின் தோல்விக்குப் பிறகும் ஒரு நல்ல கதையில் நாயகியாகும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்திருக்கிறது.

அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்.’

அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் தான் ஜெய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ப்ரணீதா

காதலில் தோல்வியடைந்த ஹீரோவைச் சுற்றியிருக்கும் மூன்று நண்பர்கள் அந்த ஹீரோவால் படுகிற அவஸ்தைகளைத்தான் ரெண்டேகால் மணி நேரம் சிரிக்க சிரிக்க காமெடிப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 12

படத்தில் வருகிற ஒரு பாடல் காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’, ‘சூப்பர் சிங்கர்’, ‘நீயா நானா’ என எல்லா பிரபலமான டிவி நிகழ்ச்சிகளையும் செம கலாய் கலாய்த்திருக்கிறார்கள். கருணாகரன், காளி வெங்கட்ட்டோடு இன்னொரு புதுமுகம் தான் ஜெய்யின் நண்பர்களாக வருகிறார்கள்.

”இந்தப்படத்தின் கதையை முக்கால் மணி நேரம் போனில் தான் சொன்னேன். கேட்ட உடனே நடிக்க சம்மதித்து விட்டார்” ப்ரணீதா என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி இன்னொரு முக்கியமான சமாச்சாரத்தையும் சொன்னார்.

”படத்தோட ஒரு பாடலை கொடைக்கானலில் ஒரு மலைப்பகுதியில் எடுத்தோம். அதுல ஜீப் மட்டும் தான் போக முடியும். அங்க பெண்களோட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலைமை தான் இருந்துச்சு. அந்த கஷ்டங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல்  மூன்று நாட்கள் அந்த இடத்துல இருந்து எனக்காக நடிச்சுக் கொடுத்தாங்க. அதுக்காக நான்ப்ரணீதாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

மற்ற நடிகைகள்கிட்ட இப்படி நடிக்க வெச்சிருந்தா நடிச்சிருப்பாங்களான்னு தெரியாது. அந்த ஒத்துழைப்புக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.” என்று மனமுருக தெரிவித்தார் இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி.

இந்த மாதிரி நடிகைகளுக்கு சான்ஸ் கொடுங்க டைரக்டர்ஸ்!