‘கவுண்டமணி உதை’ன்னா சும்மாவா…?

Get real time updates directly on you device, subscribe now.

engalukku

காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி நடிக்கும் புதிய திரைப்படம் ”எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. மதுரையில் பரபரப்பான மாட்டுதாவணி, தெப்பக்குளம் நத்தம் ரோடு போன்ற பகுதிகளில் கவுண்டமணி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதில் கிளைமாக்ஸில் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் கவுண்டமணி பங்கேற்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்கினார். சுமார் 3 நாட்கள் கொஞ்சமும் களைப்பின்றி அதிரடி சண்டை காட்சியில் நடித்துள்ளார் காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமி.

மிகவும் சிறப்பாக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் இதில் கவுண்டமணி ஜோடியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, சௌந்தரராஜா, சதுரங்க வேட்டை வளவன்,  நான் மகான் அல்ல ஜிகிர்தண்டா ராமச்சந்திரன் மற்றும் பின்னணி பாடகர் வேல்முருகன், ஒளிப்பதிவாளர் டி.கண்ணன், வாசகன் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

மதுரை படப்பிடிப்பு முழுவதும் முடிந்து எஞ்சிய காட்சிகள் சென்னையில் விரைவில் படமாக்கப்பட இருக்கிறது. இயக்குனர் சுசிந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இதனை இயக்குகிறார்.