ரஜினி, கமலுக்கு சமர்ப்பணமாக வரும் ‘எங்கிட்ட மோதாதே’! : தயாரிப்பாளர் பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

enkitta-modhadhe

”எங்கிட்ட மோதாதே” திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று சென்னையில் நடைபெற்றது, கதாநாயகன் நட்டி (எ) நட்ராஜ், ஈராஸ் சாகர், படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், கணேஷ் சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, ஸ்டன்ட் மாஸ்டர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது,

போன வாரம் என்னடானா என்னோட உதவியாளர் ”புரூஸ் லீ” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன். இந்த வாரம் என்னுடைய உதவிய இயக்குநர் ராமு செல்லப்பாவின் என்கிட்ட மோதாதே திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருக்கிறேன். ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குநராக சேரும்போது நான் அவரிடம் கேட்ட முதல் விஷயம் உனக்கு சமைக்க தெரியுமா என்று தான். அப்போது என்னிடம் தெரியும் என்றார்.

அதன் பிறகு நான் அவரை சமைக்க சொன்னேன், அவர் சமைத்த உணவு மிகவும் மோசமாக இருந்தது அதன் பிறகு நான் அவருக்கு முதலில் சமைக்கத் தான் கற்று கொடுத்தேன். அதன் பிறகு தான் என்னிடமிருந்து அவர் சினிமாவை கற்று கொண்டார்.

வம்சம் திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில் இவர் எப்போதும் கூட்டத்தை மறைந்து இருந்து தான் வேலை வாங்குவான் ஏனென்றால் அவர் உயரம் கம்மியாக இருப்பதால் யாரும் அவரை பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால். பின்னர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து அதன் பின்னர் என்னிடம் வந்து ”சியர்ஸ்” என்னும் தலைப்பில் கதை சொன்னார். அதை என்னை தயாரிக்கவும் சொன்னார். ஆனால் அதை நான் மறுத்து விட்டேன், ஏனென்றால் அப்படத்தின் கதை அப்படி அந்த படம் யு/ஏ வகையறா கதை கூட இல்லை அது ஒரு ”ஏ ஏ ஏ” வகையை சேர்ந்த கதை. எங்க இருந்து இந்த மாதிரி கதையெல்லாம் பிடிச்ச என்று நான் அவனிடம் கேட்டேன் அதற்கு அவன் இது என்னுடைய நண்பரின் கதை இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்றான்.

அவனிடம் இதை தயாரிக்க முடியாது என்றதும் வெகு நாட்கள் கழித்து வேறு ஒரு கதை எழுதி இருக்கிறேன் இந்த கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும் என்று கூறினான் அதுதான்
”எங்கிட்ட மோதாதே” திரைப்படத்தின் கதை. இப்படத்தின் ட்ரைலர் முதல் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

விழாவில் நாயகன் நட்டி பேசிய போது, ”இப்படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா என்னிடம் கதை சொல்ல வரும் போது சிறுவன் போல் இருந்தார். நான் இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் என்று கூறி என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் கதை கூறியதும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்து. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தில் நடிக்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் மற்றும் மகிழ்ச்சி” என்றார்.

விழாவில் பேசிய ஈரோஸ் சாகர் அவர்கள் ”இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய ஒரு படைப்பாக இருக்கும்.
1980 களில் நடந்த உண்மை விஷயங்களை கொண்ட கதை தான் ”எங்கிட்ட மோதாதே” என்றார்.