ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!
இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’.
அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார்.
தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இசை: ஜான் பீட்டர்
எடிட்டிங்: சுதர்ஷன்
கலை: மைக்கேல் ராஜ்
நடனம்: ராதிகா
சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி
ஒப்பனை: ராமச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: பாரதி
பாடல்கள் : ஏக்நாத்
செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.