‘எந்திரன் 2’ எப்போ..? : இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கங்க…
இன்னும் ‘கபாலி’ கொண்டாட்டமே களைகட்ட ஆரம்பிக்கவில்லை.
அதற்குள் எப்படி ’எந்திரன் 2’ காய்ச்சல் பரவ ஆரம்பித்தது என்பது தான் நேற்று முன்தினம் ட்விட்டரை மேய்ந்து கொண்டிருந்த எல்லோருடைய மண்டையையும் குடைந்தெடுத்த கேள்வி?
ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் ‘எந்திரன் 2’ டைட்டில் இருந்ததைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகி ஆளாளுக்கு ரீட்விட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
முதல் முறையாக ‘எந்திரன் 2’ படத்தை 3டி கேமராக்களைக் கொண்டு படமாக்கப் போகிறார்கள். இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார், வில்லனாக நடிக்க அர்னால்ட் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என வடக்கு, தெற்கு என நான்கு திசைகளில் உள்ள ஊடகங்களும் தகவல்களை எழுதி குவித்து விட்டன.
அதெப்படி இன்னும் கபாலி படப்பிடிப்பே முடியவில்லை. அதற்குள் ‘எந்திரன் 2’ படத் தகவல்கள் வெளியானது என்று செய்திகளைப் படித்த எல்லோரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கவந்த செய்திகள் எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் என ரஜினி மற்றும் ஷங்கர் தரப்பிலிருந்து மறுத்திருக்கிறார்கள். மேற்படி செய்திகள் பரவியதைக் கேள்விப்பட்ட இருவருமே செம அப்செட்.
‘எந்திரன் 2’ தொடர்பாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இப்போதைக்கு ‘கபாலி’ படம் மட்டுமே ரசிகர்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். இப்போதே எந்திரன் 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
காத்திருந்து கொண்டாடுறதுதாம்மா சுகமோ சுகம்…!